×

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்.30ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டது. மார்ச் 31ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ரூ. 3.62 லட்சம் கோடி மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

திரும்ப பெறும் அறிவிப்பு வெளியான மே 19ம் தேதி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி ரூ.3.14 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வங்கிகளுக்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இன்னும் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கி கணக்குகளுக்கு திரும்பி வர வேண்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

மொத்தத்தில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88 சதவீத நோட்டுகள் வங்கி கணக்கிற்கு திரும்பி வந்துவிட்டன. சுமார் 87 சதவீதம் டெபாசிட்களாகவும், 13 சதவீதம் வங்கிகளில் மாற்றியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31வரை ரூ.23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப பெறப்பட்டுள்ளன. திரும்பப்பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87% வைப்புத் தொகையாகவும், 13% பிறமதிப்பு நோட்டுகளாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

The post நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...